Tuesday, June 11, 2013

கணினி பாகங்களின் வேகத்தை அளக்கும் முறை:


கணினியின் பாகங்கள் பெரும்பாலும் டிஜிட்டல் சர்க்யூட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது.இவைகள் இயங்கக் கடிகாரத் துடிப்பு மிக அவசியம் ஆகும்.ஒரு விநாடியில் எத்தனை கடிகாரத் துடிப்புகளில் வேலை செய்கிறது என்பதைப் பொறுத்து வேகம் அதன் வேகம் கணக்கிடப்படுகிறது.
(எ.கா):நமது உடலின் இதயதுடிப்பைச் சொல்லலாம்.ஒவ்வொரு இதயத்துடிப்பின் போதும் இரத்த ஓட்டம் உடலில் பல பகுதிக்குச் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் பல செல்கள் புதியதாக உருவாகிறது,பல செல்கள் இறக்கிறது.நமது இதயதுடிப்பின் வேகம் சராசரி வேகத்தை விட குறைந்தாலும் கூடினாலும் ஆபத்து.நமது இதயதுடிப்பு வேகம் நிமிடத்திற்கு இத்தனை துடிப்பு என்று அளக்கப்படுகிறது.அதேபோல் கணினியில் வினாடிக்கு இத்தனை கடிகாரத் துடிப்பு என்று அளக்கப்படுகிறது.இந்த கடிகாரத் துடிப்பை ஏற்படுத்துவது கிரிஸ்டல் ஆசிலேட்டர் எனப்படும் ஒரு சிறிய பொருள்.
இந்தக் கடிகார துடிப்பில் இரண்டு பகுதி உண்டு.ஹை(High) அல்லது 1 மற்றது லோ(Low) அல்லது 0.
ஒரு ஹை பகுதியும் ஒரு லோ பகுதியும் சேர்ந்தது ஒரு சுழற்சி(Cycle) ஆகும்.இந்த ஒரு சுழற்சியை முடிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை "சுழற்சி நேரம்"(Cycle time) என்பர்.ஒரு வினாடிக்கு எத்தனை சுழற்சிகள் நடைபெறுகிறதோ அதைத்தான் "சுழற்சி வேகம்" என்பர்.இந்த வேகம் "ஹெர்ட்ஸ்"(hertz) என்ற அலகால் அளக்கப்படுகிறது.(எ.கா) ஒரு வினாடிக்கு ஐந்து சுழற்சிகள் நடைபெற்றால் அதன் வேகம் 5Hz ஆகும்.
1Hz=வினாடிக்கு ஒரு சுழற்சி.
1000 Hz = 1 கிலோ ஹெர்ஸ் (KHz)
1000 KHz = 1மெகா ஹெர்ஸ் (MHz)
1000 MHz = 1 ஜிகா ஹெர்ஸ் (GHz)
1000 GHz = 1 டெரா ஹெர்ஸ் (THz)
ஒரு நுண்செயலி 100 மெகா ஹெர்ஸ் வேகத்தில் செயல்படுகிறதென்றால் அது ஒரு கோடி சுழற்சிகளை ஒரு வினாடியில் முடிக்கிறது என்று அர்த்தம்.ஒரு கோடி சுழ்ற்சிக்கு ஒரு விநாடி என்றால் ஒரு சுழற்சியை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?..மிக..மிக...மிக குறைந்த நேரமே ஆகும்.இதை வினாடியில் கூற வேண்டுமெனில் கீழ் கண்டவாறு கூறலாம்.
மைக்ரோ விநாடி = 1/100,000 விநாடி (விநாடியில் பத்துலட்சத்தில் ஒரு பகுதி)
நேனோ விநாடி=1/100,00,000 விநாடி
பிகோ விநாடி = 1/100,00,00,000 விநாடி
ஃபெம்டோ விநாடி= 1/100,00,00,00,00,000 விநாடி

இலவச சேவை தொலைபேசி எண்கள்(கணினி வடிவமைப்பாளர்கள்)


AMD - 1800 425 6664
Apple Computers - 1800 444 683
Canon - 1800 333 366
Cisco Systems - 1800 221 777
Compaq - HP - 1800 444 999
Data One Broadband - 1800 424 1800
Dell - 1800 444 026
Epson - 1800 44 0011
eSys - 3970 0011
Genesis Tally Academy - 1800 444 888
HCL - 1800 180 8080
IBM - 1800 443 333
Lexmark - 1800 22 4477
LG - 1901 180 9999
Marshal's Point - 1800 33 4488
Microsoft - 1800 111 100
Microsoft Virus Update - 1901 333 334
Samsung - 1800-110-011
Seagate - 1800 180 1104
Symantec - 1800 44 5533
TVS Electronics - 1800 444 566
WeP Peripherals - 1800 44 6446
Wipro - 1800 333 312
xerox - 1800 180 1225
Zenith - 1800 222 004

PDF என்பது என்ன?


இப்போது வரும் பெரும்பாலான மென்நூல்கள்,மென்ப்பொருள் கையேடுகள் PDF கோப்புகளாக வருகிறது.
PDF என்பது Portable Document Format என்பதன் சுருக்கம் ஆகும்.இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கோப்பில் உள்ள வாக்கியங்களை எந்த கணினியிலிருந்து படிக்கமுடியும்.அதற்கு தேவை PDF reader என்ற மென்பொருள் இருந்தால் போதும்.இது இலவசமாகவே கிடைக்கிறது.

PDF -ன் அவசியம் என்ன?
நமது கணினியில் தமிழில் ஒரு எழுத்துருவை பயன்படுத்தி ஒரு ஃபைலை உருவாக்குவோம்.அதே ஃபைலை மற்றொரு கணினியில் படிப்பதற்காக திறந்தால் சதுர வடிவமாக எழுத்துக்கள் படிக்க முடியாதவாறு இருக்கும்.
இந்த கணினியில் தகுந்த தமிழ் எழுத்துருவை நிறுவினால் மட்டுமே நம்மால் அந்த கோப்பில் உள்ள வார்த்தைகளை படிக்க முடியும்.இந்த சிக்கலை களைவதற்க்கு தான் PDF பயன்படுகிறது.
உங்கள் ஃபைலை PDF கோப்பாக மாற்றிவிட்டால் எந்த கணினியிலும் திறந்து படிக்கமுடியும்.அது மட்டும்மல்லாமல் எளிதாக ப்ரிண்ட் செய்ய்வும் முடியும்.

அடோப் நிறுவனத்தின் acrobat distiller மென்பொருளை கொண்டு PDF கோப்புகளை உருவாக்க/மாற்ற முடியும்.ஆனால் இந்த மென்பொருளை விலை கொடுத்து வாங்க வேண்டும்.இதுதவிர இலவசமாக கிடைக்க கூடிய PDF மென்பொருள்கள் இணையத்தில் நிறைய உள்ளன.

http://get.adobe.com/uk/reader/
ஓப்பன் ஆபிஸ் PDF கோப்புகளை ஆதரிக்கும்.இதனால் ஓப்பன் ஆபிசில் நாம் உருவாக்கும் கோப்புகளை எளிதாக PDF ஆக மாற்றலாம்.

PDF லிருந்து Wordக்கு மாற்ற கீழ்கண்ட இணையதளத்திலிருந்து இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
http://www.hellopdf.com

கூகுளில் தேடினால் நிறைய மென்பொருள்கள் கிடைக்கும்..

உஷார் மக்களே !! ஆன்-லைன் வங்கி பரிவர்த்தனை



முக்கியமான வங்கி தகவல்களை வங்கியிலிருந்து கேட்பதாக கேட்டு
உங்களுக்கே ஆப்புவைக்க ஒரு கோஷ்டி இணையத்தில் வளம் வந்து
கொண்டிருக்கிறது..முதன்முறையாக அதேபோல் ஒரு மெயில் எனக்கு வந்தது..என்னால் பார்த்தவுடனே அறிந்துகொள்ள முடிந்தது..இது ஒரு ஹேக் மெயில் என்று.சரி என்ன மாதிரி தகவல்களை கேட்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள சும்மா சில உல்டா தகவல்களை கொடுத்தபோது தெரியவந்தது..அதிர்ச்சியான தகவல்...

உங்களது வங்கி தகவல்களை சரிபார்க்கவேண்டும்..தயவுசெய்து உங்களது தகவல்களை கொடுத்து சரிபார்க்கவும்..என்று வங்கியிலிருந்து மெயில் வருவதுபோல்...ஒரு மின்னஞ்சல் வரும்..அதை திறந்தவுடன்..ஆன்-லைன் வங்கி பரிமாற்றத்திற்கு என்ன தகவல்களை கொடுப்பீர்களோ ,அந்த தகவல்களை கேட்டு ஒரு திரை வரும்...அத்தோடு விட்டு விடாமல்..அடுத்த திரையில்..உங்கள் டெபிட் கார்டில் உள்ள கிரிட் எண்கள் அத்தனையும் டைப் செய்ய சொல்லி ஒரு திரை
வரும்..இங்கு உங்கள் தகவலை கொடுத்தபிறகு..சமர்த்தாக வங்கியின் உண்மையான இணைய முன் பக்கத்திற்கு சென்றுவிடும்(இது உங்களை நம்ப வைப்பதற்காக..) -இந்த தகவலை வங்கிக்கும் தெரியபடுத்தியுள்ளேன்..
கவனிக்க வேண்டியது..
போலியான மின்னஞ்சல் முகவரி..alers@icicialerts.com(எனக்கு வந்த மின்னஞ்சல் முகவரி)
போலியான இணையதள முகவரி..
ஆன்-லைன் பரிவர்த்தனை செய்யும் போது வங்கி சொல்லும் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிக்கவும்..
முக்கியமாக வங்கி கடவு சொல்லை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதிர்கள்.
ஆன்-லைன் பரிவர்த்தனை செய்யும் போது கவனமாக இருக்கவும்..சந்தேகம் ஏற்ப்பட்டால் வங்கியின் ஹெல்ப்-லைனை அழைக்கவும்.

ஸ்பீட் 1 டெரா ஹெர்ட்ஸ் மெமரி 1 ஜெட்டா பைட்


சில நண்பர்கள் எந்திரன் படம் பார்த்துவிட்டு அது என்ன டெரா ஹெர்ட்ஸ் , ஜெட்டா பைட் என்றால் என்ன என்று கேட்டு மெயில் அனுப்பியிருந்தார்கள்....அவர்களுக்காகவும்..அதை பற்றி தெரிந்துகொள்ள விரும்புபவர்காகவும்..
டெரா ஹெர்ட்ஸ் என்றால் என்ன என்று ஏற்கனவே இந்த ப்ளாகில் விவரித்துள்ளேன் ..
அடுத்ததாக ஜெட்டா பைட் என்றால் என்ன என்று பார்ப்போம்..
ஒரு தகவலை ஹார்ட்டிஸ்கில் அல்லது மெமரி கார்டில் சேமிக்க எடுத்துகொள்ளும் அளவை பைட்டில்(Byte) கூறுவோம்.
(எ.கா) ஒரு MP3 பாடல் கோப்பை சேமிக்க 5MB இடம் தேவைப்படும்.
பிட் என்பது பைனரி எண்ணில் அல்லது ஆக இருக்கும்.
பிட் அல்லது 1
பிட் = 1 நிப்பிள் (1nibble)
பிட் = 1 பைட்
1024 பைட் = 1 கிலோ பைட் (KB) Kilo Byte
1024 கிலோபைட் = 1 மெகா பைட் (MB) Mega Byte
1024 மெகா பைட் ஜிகா பைட் (GB) Gega Byte
1024 ஜிகா பைட் = 1 டெரா பைட் (TB) Tera Byte
1024 டெரா பைட் = 1 பீட்டா பைட் (PB) Peta Byte
1024 பீட்டா பைட் = 1 எக்ஸா பைட் (EB) Exa Byte
1024 எக்ஸா பைட் = 1 ஜெட்டா பைட் (ZB) Zetta Byte
1024 ஜெட்டா பைட் = 1 யோட்டா பைட் (YB) Yotta Byte

கூகுள் அனலிடிக்ஸ்



உங்கள் இணையதளத்தை அலசி ஆராய இலவசமாக கிடைக்கும் மிகசிறந்த ஆன்லைன் மென்பொருள்.உங்கள் இணையதளம் எத்தனை தடவை அணுகப்பட்டுள்ளது,அதிகமாக எந்தபக்கத்தை பார்த்துள்ளனர்,நாள்வாரியாக அறிக்கை,போன்று உங்கள் இணையதளத்தை பற்றி பல தகவல்களை கொடுக்கிறது.

உங்கள் இணையதளத்தை கூகுள் அனலிடிக் தளத்தில் பதிவுசெய்துவிட்டால் உங்களது இணையதளத்தை பற்றி அத்தனை தகவலையும் அது ஆராய்ந்து உங்களுக்கு எளிதில் புரிந்துகொள்கிற வடிவில் படங்களாகவும்,தகவல்களாகவும் தருகிறது
.

கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அன்றிலிருந்து இன்றுவரை ..




தொழில்நுட்பத்தின் வளர்ச்சி குறித்து நண்பர்களுடன் விவாதித்து கொண்டிருக்கும் போது சக்கரத்திலிருந்து ஆரம்பித்த விவாதம் முகில் கணினியகம் வரை சென்று முடிந்தது சக்கரம் கண்டுபிடித்த பிறகே மனித நாகரிகம் மிக வேகமாக வளர்ந்தது . அதன் பிறகு அசாத்திய கண்டுபிடிப்பு என்றால் அது கணினி.

கணினி கண்டுபிடிக்கபட்ட 40 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி ,இப்போது மனிதன் கண்டுபித்த அத்தனைக்கும் கணினியின் பங்கு ஏதோ ஒருவகையில் பயன்பட்டுகொண்டிருக்கிறது.

நான் "ஹார்ட்வேர் இன்ஜினீயர்" என்ற புத்தகம் எழுதுவதற்காக கணினியின் ஆரம்பகாலம் குறித்து தேடி படித்தது இப்போது ஒருமுறை பயன்பட்டது.கணினி தொழில்நுட்பத்திற்கு ஆரம்பமாக "ஆபக்கஸ்" -ஐ காட்டுகின்றனர்.இது மணிச்சட்டம் கொண்ட ஒரு சிலேட். கணிதத்தை எளிதாக பயன்படுத்துவதர்க்காக இதை கண்டுபித்தனர்.அதன் பிறகு கணிதத்தை எளிதாக்குவதற்கு ஒரு எந்திரத்தை கண்டுபிடிப்பதில் பலர் முயற்சி செய்தனர்.(நேப்பியர்,ஆர்த்ரெட்,பாஸ்கல்,சார்லஸ் பபேஜ் )பிறகு ஹெர்மன் ஹோலரித் மக்கள் தொகை கணக்கெடுப்பிர்க்காக டேபுலட்டிங் மெசின் ஒன்றை உருவாக்கினார் ,பின்னாளில் இவர்தான் (ஐ.பி.எம் )நிறுவனத்தை நிறுவினார்.

அப்போதிருந்த கணினிகள் வெற்றிட குழாய்கள் (vaccum tube) கொண்டு வடிவமைக்கப்பட்டன.இதனால் உருவத்தில் மிக பெரியது ,எடையில் பல நூறு கிலோவும் இருந்தன.

டிரான்ஸ்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்டது கணினி தொழில்நுட்பத்தின் அடுத்த திருப்புமுனையாகஅமைந்தது.வெற்றிட குழாய்கள் நீக்கப்பட்டு ,டிரான்ஸ்சிஸ்டர் பயன்படுத்தப்பட்டதால் கணினியின் அளவும்,எடையும் சிறியதாக மாறியது..

டிரான்ஸ்சிஸ்டர்-ஐ இன்னும் எவ்வாறு சுருக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது ஐ.சி கண்டுபிடிக்கபட்டது.

பல ஐ.சி சர்க்யூட்களை ஒரே சில்லுக்குள் நுழைக்கலாம் என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது இன்டெல் நிறுவனத்தின் ராபர்ட் நைஸ் என்பவர் மைக்ரோபிராசசரை கண்டுபிடித்தார்.

மைக்ரோப்ராசசர் கண்டுபிடிக்கப்பட்டபிறகு கணினியின் மிகவும் சிரியதானது.மேசை கணினி,மடிக்கணினி,கைகணினி என்று அளவில் சுருங்கிக் கொண்டே செல்கிறது.
கணினியின் பரிணாம வளர்ச்சி :

Mainframe computer -> Mini computer -> Micro computer -> Mobile computer -> Virtualization -> Cloud computing..



அடுத்தகட்டம் virtualization,cloud computing இதை பற்றி அடுத்து பார்க்கலாம் ..

கூகிள் க்ரோம் புக்


முகில் கணினியக ( cloud computing) தொழில்நுட்பத்தை கணினி பயன்படுத்தும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையாக கொண்டுசொல்ல கூகிள் எடுத்திற்கும் அடுத்தகட்ட முயற்சி என்று சொல்லலாம்.

முகில் கணினியக தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தும் புதிய இயக்குதளத்தை(OS) கூகிள் நிறுவனம் வெளியிட உள்ளது.இதற்கு க்ரோம் ஒ.எஸ் என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த க்ரோம் ஒ.எஸ் நிறுவப்பட்டு வெளியிடப்படும் லேப்டாப்புகளை "க்ரோம் புக்" என்கின்றனர்.இந்த கணினிகள் இயங்க இணைய இணைப்பு மிக முக்கியம்.இணைய இணைப்பு இல்லாமல் உங்களால் எந்த ஒரு மென்பொருளையும் இயக்கமுடியாது.
சில சிறப்பம்சங்கள்:
இது 8 வினாடிகளில் பூட் ஆகக்கூடியது
நூற்றுக்கணக்கான இலவச ஆன்லைன் மென்பொருள்களை கொண்டது.தேவையான மென்பொருள்களை கூகிள் வெப்ஸ்டோர் -லிருந்து நிறுவிக்கொள்ளலாம்.
இணைய இணைப்பிற்கு 3G மற்றும் வை-ஃபை(wi-fi)தொழில்நுட்பம் உள்ளது
தகவல்கள் அனைத்தும் இணையத்திலே சேமிக்கபடுவதால் உலகில் எங்கிருந்தும் உங்கள் தகவலை எடுத்துக்கொள்ளாலம்

ஆண்டி-வைரஸ் மென்பொருள் தேவைபடாதவாறு வடிவமைத்துள்ளனர்.

கூகுள் CR48என்ற க்ரோம் புக் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 15 முதல் சாம்சங் மற்றும் ஏசர் இரண்டு நிறுவனங்களும் கூகுளுடன் இணைந்து க்ரோம் புக்-ஐ வெளிடுகின்றனர்.இது
நம் நாட்டில் இணையம் இப்போது பட்டிதொட்டியெல்லாம் இருந்தாலும் முழுவதும் இணைய இணைப்பை கொண்டு இயங்கும் கணினியின் பயன்பாடு இப்போது சாத்தியபடாது..இன்னும் சிலவருடங்கள் தேவை..

கூகிள் க்ரோம் புக்(chrom book)


முகில் கணினியக ( cloud computing) தொழில்நுட்பத்தை கணினி பயன்படுத்தும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையாக கொண்டுசொல்ல கூகிள் எடுத்திற்கும் அடுத்தகட்ட முயற்சி என்று சொல்லலாம்.

முகில் கணினியக தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தும் புதிய இயக்குதளத்தை(OS) கூகிள் நிறுவனம் வெளியிட உள்ளது.இதற்கு க்ரோம் ஒ.எஸ் என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த க்ரோம் ஒ.எஸ் நிறுவப்பட்டு வெளியிடப்படும் லேப்டாப்புகளை "க்ரோம் புக்" என்கின்றனர்.இந்த கணினிகள் இயங்க இணைய இணைப்பு மிக முக்கியம்.இணைய இணைப்பு இல்லாமல் உங்களால் எந்த ஒரு மென்பொருளையும் இயக்கமுடியாது.
சில சிறப்பம்சங்கள்:
இது 8 வினாடிகளில் பூட் ஆகக்கூடியது
நூற்றுக்கணக்கான இலவச ஆன்லைன் மென்பொருள்களை கொண்டது.தேவையான மென்பொருள்களை கூகிள் வெப்ஸ்டோர் -லிருந்து நிறுவிக்கொள்ளலாம்.
இணைய இணைப்பிற்கு 3G மற்றும் வை-ஃபை(wi-fi)தொழில்நுட்பம் உள்ளது
தகவல்கள் அனைத்தும் இணையத்திலே சேமிக்கபடுவதால் உலகில் எங்கிருந்தும் உங்கள் தகவலை எடுத்துக்கொள்ளாலம்

ஆண்டி-வைரஸ் மென்பொருள் தேவைபடாதவாறு வடிவமைத்துள்ளனர்.

கூகுள் CR48என்ற க்ரோம் புக் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 15 முதல் சாம்சங் மற்றும் ஏசர் இரண்டு நிறுவனங்களும் கூகுளுடன் இணைந்து க்ரோம் புக்-ஐ வெளிடுகின்றனர்.இது
நம் நாட்டில் இணையம் இப்போது பட்டிதொட்டியெல்லாம் இருந்தாலும் முழுவதும் இணைய இணைப்பை கொண்டு இயங்கும் கணினியின் பயன்பாடு இப்போது சாத்தியபடாது..இன்னும் சிலவருடங்கள் தேவை..

கூகிள் க்ரோம் புக்(chrom book)


முகில் கணினியக ( cloud computing) தொழில்நுட்பத்தை கணினி பயன்படுத்தும் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் முழுமையாக கொண்டுசொல்ல கூகிள் எடுத்திற்கும் அடுத்தகட்ட முயற்சி என்று சொல்லலாம்.

முகில் கணினியக தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தும் புதிய இயக்குதளத்தை(OS) கூகிள் நிறுவனம் வெளியிட உள்ளது.இதற்கு க்ரோம் ஒ.எஸ் என்று பெயர் சூட்டியுள்ளது. இந்த க்ரோம் ஒ.எஸ் நிறுவப்பட்டு வெளியிடப்படும் லேப்டாப்புகளை "க்ரோம் புக்" என்கின்றனர்.இந்த கணினிகள் இயங்க இணைய இணைப்பு மிக முக்கியம்.இணைய இணைப்பு இல்லாமல் உங்களால் எந்த ஒரு மென்பொருளையும் இயக்கமுடியாது.
சில சிறப்பம்சங்கள்:
இது 8 வினாடிகளில் பூட் ஆகக்கூடியது
நூற்றுக்கணக்கான இலவச ஆன்லைன் மென்பொருள்களை கொண்டது.தேவையான மென்பொருள்களை கூகிள் வெப்ஸ்டோர் -லிருந்து நிறுவிக்கொள்ளலாம்.
இணைய இணைப்பிற்கு 3G மற்றும் வை-ஃபை(wi-fi)தொழில்நுட்பம் உள்ளது
தகவல்கள் அனைத்தும் இணையத்திலே சேமிக்கபடுவதால் உலகில் எங்கிருந்தும் உங்கள் தகவலை எடுத்துக்கொள்ளாலம்

ஆண்டி-வைரஸ் மென்பொருள் தேவைபடாதவாறு வடிவமைத்துள்ளனர்.

கூகுள் CR48என்ற க்ரோம் புக் வெளியிட்டுள்ளது.வரும் ஜூன் 15 முதல் சாம்சங் மற்றும் ஏசர் இரண்டு நிறுவனங்களும் கூகுளுடன் இணைந்து க்ரோம் புக்-ஐ வெளிடுகின்றனர்.இது
நம் நாட்டில் இணையம் இப்போது பட்டிதொட்டியெல்லாம் இருந்தாலும் முழுவதும் இணைய இணைப்பை கொண்டு இயங்கும் கணினியின் பயன்பாடு இப்போது சாத்தியபடாது..இன்னும் சிலவருடங்கள் தேவை..

ஹார்ட்வேர் இன்ஜினீயர் புத்தகம்


கணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம்.2004 

ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம் புத்தகங்கள் விற்பனையானது.

அண்ணா பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் திரு.பாலகுருசாமி அவர்களால் அணிந்துரை எழுதப்பட்ட புத்தகம்.அபாகஸ் கண்டுபிடிப்பில் ஆரம்பிக்கிறது முதல் அத்தியாயம் கணினி ஒருங்கினைத்தபின் ஏற்படும் பிழைகளை எவ்வாறு சரிசெய்வது வரை விவரிக்கப்பட்டு முடிகிறது கடைசி அத்தியாயம்.

இன்டெலின் 4004 பிராசசரில் தொடங்கி pentium 4 பிராசசரில் முடிகிறது
230 க்கும் அதிக பக்கங்களை கொண்ட புத்தகம்.சில அத்தியாயங்களின் ஒரு சில பக்கங்கள் உங்களுக்காக.

மூன்றாம் பதிப்பு வெளியிடுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்.இந்த புத்தகம் தேவை படுபவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியபடுத்தவும்.

மூன்றாம் பதிப்பில் இன்டெல் -இன் ஐ -கோர் பிரசசர்களும் இன்னும் பல நவீன தொழில்நுட்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்



ஜப்பானின் ஃபிஜிட்சு நிறுவனம் சமீபத்தில் K computer என்ற புதிய சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.இதுதான் இப்போது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் வேகம் 8.162 petaflops அல்லது வினாடிக்கு 8.162 quadrillion கணக்கீடுகளை செய்யும் திறனுடையது.இதற்கு முன் சீனாவின் NUDT Tianhe-1A என்ற சூப்பர் கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கணினியாக இருந்தது ,இதன் வேகம் 2.507 petaflops ஆகும்.

தற்போது இது 672 கேபினட்(cabinet) இணைக்கப்பட்ட மிகப்பெரிய கணினி கட்டமைப்பு.இதில் பயன்படுத்தப்படும் பிராசசர் 8 core SPARC64 VIIIfx .மொத்தம் 672 கேபினட்-லும் 68,544பிராசசர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ப்ராசசரிலும் 8 கோர் என்றால் மொத்தமாக 5,48,352 பிராசசர் கோர்-களை கொண்டுள்ளது.

கூகுள் இன்டோர் (Google Indoor)

வீதி வரை வந்த கூகுள் மேப் இப்போது வீட்டிற்குள் வந்துவிட்டது .ஆம் கூகுள் "Indoor" மென்பொருள் கொண்டு இப்போது விமான நிலையம்,ஹோட்டல்,சாப்பிங் மால்,திரையரங்கம்...,ஆகியவற்றின் உள் கட்டமைப்பு வரைபடங்களை பார்க்கமுடியும்.உதாரணமாக உங்கள் நண்பர் ஒருவரை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு சென்று பார்க்க விரும்புகிறீர்கள் என்றால் அவர் அந்த ஹோட்டலில் 5 ஆவது தளத்தில் 512 வது அறையில் இருக்கிறார் என்றால் இந்த வரைபடம் உதவியுடன் எளிதாக அவர் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.கூகுள்ஆண்ட்ராயாடு செல்பேசிகளுக்கு இந்த மேப் மென்பொருளை நிறுவிக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு ....


மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ்


மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் (Microsft Surface)

கணினி சந்தையில் இன்று அதிகமாக விற்பனையாகி  கொண்டிருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் 
ஆப்பிள் கைக்கணினிகளுக்கு (டேப்லெட்) போட்டியாக நீண்ட ஆராய்ச்சிக்கு பின் மைக்ரோசாப்ட் நிறுவனம் சர்ஃ பேஸ்  என்னும் புதிய கைக்கணினியை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது. பொது பயன்பாட்டிற்கு வரும் அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது மற்றும் இதற்கான முன்பதிவை கடந்த 16-ஆம் தேதி துவக்கியுள்ளது.
டெஸ்க்டாப் மற்றும் மடிக்கணினிகள் விற்பனையில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் அதிகம் இருந்தது ஆனால் மொபைல் மற்றும் கைக்கணினி சந்தையில் வெற்றி பெறமுடியவில்லை.
இதனால் நீண்ட இடைவெளிக்குப்பின் விண்டோஸ் 8 இயங்குதளம் மற்றும் பல புதிய தொழில்நுட்பத்துடன் களத்தில் இறங்கியுள்ளது. இந்த முயற்சி மைக்ரோசாப்ட்-க்கு வெற்றியா? இல்லை தோல்வியா? என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ்  இரண்டு பிரிவுகளில் வருகிறது.
1. மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ்  RT
2.மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ்  Pro

முதலில் விற்பனைக்கு வருவது சர்ஃ பேஸ் RT ஆகும்.அடுத்த மூன்று மாதத்தில் சர்ஃ பேஸ் Pro வெளிவரும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.அது சரி இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்று வினவுகிறீர்களா?பயன்படுத்தப்படும் தொழிநுட்பம் மற்றும் அதற்கேற்ற விலை மட்டுமே.இவை இரண்டுக்குமான வித்தியாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சர்ஃ பேஸ் RT 

பிராசசர்(நுண்செயலி)    - ARM  Cortex-A49
மெமரி (நினைவகம்)      - 2GB 
திரை   - 1366 x 768 px 10.6 inches 
அகலம்   10.81 அங்குலம்  (27.5 செ.மீ)
உயரம்    6.77 அங்குலம் (17.2  செ.மீ)
தடிமன்   0.37 அங்குலம் (9.4  செ.மீ)
மின்சாரம் :31.5 W
கேமரா:  720 பிக்சல் முன்/பின் பக்கம்
எடை : 680 கிராம் 

இயங்குதளம் (OS)  : மைக்ரோசாப்ட் விண்டாஸ் 8 RT
மெமரி கார்டு : 64 GB SDXCஅதிகபட்ச அளவு 

 சர்ஃ பேஸ் Pro 
பிராசசர்(நுண்செயலி) - இன்டெல் கோர் i 5
மெமரி (நினைவகம்)    -  2GB
திரை -  
அகலம்   10.81 அங்குலம்  (27.5 செ.மீ)
உயரம்    6.81 அங்குலம் (17.2  செ.மீ)
தடிமன்   0.51 அங்குலம் (9.4  செ.மீ)
மின்சாரம் :42 W
கேமரா:  720 பிக்சல் முன்/பின் பக்கம்
எடை : 910 கிராம்

இயங்குதளம் (OS) : மைக்ரோசாப்ட் விண்டாஸ் 8 PRO
மெமரி கார்டு : 128 GB SDXCஅதிகபட்ச அளவு 


கீபோர்ட் எளிதாக ஒட்டி எடுக்க கூடிய வகையில் விளிம்புகளில் காந்தங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை பல வண்ணங்களில் கிடைக்கிறது.
 


பின் புறம்  கைக்கணினியை நிமிர்த்தி வைத்து தாங்கி பிடிக்க ஒரு நிருத்தியை(stand) இணைத்து வைத்துள்ளனர்.
 
 

மைக்ரோசாப்ட் சர்ஃ பேஸ் RT யின் விலை  $499 டாலர் ஆகும் இதனுடன் இந்த கீபோர்டையும் சேர்த்து வாங்கினால்  $119 டாலர் கூடுதல் செலவாகும். இதை விட குறைந்த விலையில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு கைக்கணினிகளுடன் போட்டியிட்டு கணினி சந்தையில் தன்னை நிலைநிறுத்தி கொள்ளுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Sunday, June 9, 2013

Internet Explorer Navigation


  • CTRL+B (Open the Organize Favorites dialog box)
  • CTRL+E (Open the Search bar)
  • CTRL+F (Start the Find utility)
  • CTRL+H (Open the History bar)
  • CTRL+I (Open the Favorites bar)
  • CTRL+L (Open the Open dialog box)
  • CTRL+N (Start another instance of the browser with the same Web address)
  • CTRL+O (Open the Open dialog box, the same as CTRL+L)
  • CTRL+P (Open the Print dialog box)
  • CTRL+R (Update the current Web page)
  • CTRL+W (Close the current window)

Remote Desktop Connection Navigation


  • CTRL+Alt+END (Open the m*cro$oft Windows NT Security dialog box)
  • Alt+PAGE UP (Switch between programs from left to right)
  • Alt+PAGE DOWN (Switch between programs from right to left)
  • Alt+INSERT (Cycle through the programs in most recently used order)
  • Alt+HOME (Display the Start menu)
  • CTRL+Alt+BREAK (Switch the client computer between a window and a full screen)
  • Alt+Delete (Display the Windows menu)
  • CTRL+Alt+- (Place a snapshot of the active window in the client on the Terminal server clipboard and provide the same functionality as pressing PRINT SCREEN on a local computer.)
  • CTRL+Alt++ (Place a snapshot of the entire client window area on the Terminal server clipboard and provide the same functionality as pressing Alt+PRINT SCREEN on a local computer.)